"16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்".. காவல் நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு.!
பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என மேற்கு காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பி.எப்.ஐ மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் நிலைய ஆய்வாளருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில்,"காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments